தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா:  ஐஓபி வங்கி மூடல் - Bank closed

மயிலாடுதுறை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் உள்பட இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வங்கி மூடப்பட்டது.

மயிலாடுதுறை ஐஓபி வங்கி
மயிலாடுதுறை ஐஓபி வங்கி

By

Published : Oct 6, 2020, 7:12 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தரங்கம்பாடி தாலுகா இளையாளூர் ஊராட்சி வடகரையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளர் விக்காஸ் குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைை அடுத்து வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், வங்கி நகை மதிப்பீட்டாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மற்ற வங்கி ஊழியர்கள் அனைவரும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு தற்காலிகமாக இன்றும், நாளையும் வங்கி மூடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details