தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஐஏஎஸ் கிர்லோஷ் குமார்!

மயிலாடுதுறை: ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றின் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு சிறப்பு ஐஏஎஸ் அலுவலர் கிர்லோஷ் குமார் பார்வையிட்டார்.

தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஐஏஎஸ் கிர்லோஷ்குமார்
தூர்வாரும் பணியை பார்வையிட்ட ஐஏஎஸ் கிர்லோஷ்குமார்

By

Published : Jun 5, 2021, 10:47 PM IST

மயிலாடுதுறை:பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் ஆறு, வாய்க்கால்கள், வடிகால்களை முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் தூர்வார 23 இடங்களில் ரூபாய் 5.45 கோடி மதிப்பீட்டில் 431 கி.மீ, தூரத்திற்கு தூர்வாறும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், வரும் 12ஆம்தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிப்பதற்காக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு சிறப்பு ஐஏஎஸ் அலுவலர் கிர்லோஷ்குமார் கலந்துகொண்டு தூர்வாரும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் குளிச்சார் அர்ஜனவாய்க்கால் தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் பார்வையிட்டார்.

பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ’மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் அனைத்தும் வரும் 14ஆம் தேதிக்குள் முடிப்பதற்காக கூடுதல் இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து, பணிகளை விரைந்து முடிப்பதற்கு, பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஒப்பந்தகாரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். மேலும் விரைவில் பணிகள் முடிக்கப்படும்’ என்றார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தட்சிணாமூர்த்தி, அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி: அமைச்சர் தொடங்கிவைத்தார்

ABOUT THE AUTHOR

...view details