தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹைட்ரோகார்பன் திட்டத்தை முறியடிப்பேன்'- செல்வராசு - hydro carbon

நாகை: நாகை மக்களவையின் முக்கிய பிரச்னையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை எந்த வகையிலாவது முறியடிப்பேன் என நாகை மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்வராசு தெரிவித்துள்ளார்.

செல்வராசு

By

Published : May 24, 2019, 8:10 AM IST

17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் நாகை மக்களவை, திருவாரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில், மதச்சார்பற்ற கூட்டணியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராசு தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்துவந்தார். தொடர்ந்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வெற்றி தேடிதந்த அனைவருக்கும் நன்றி. மக்களவைத் தொகுதியின் முக்கிய பிரச்னையான ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் வேதாந்தா நிறுவனம் பல மாவட்டங்களில் துரத்தி அடிக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் நோக்கத்தில் இறங்கியுள்ளது. இத்திட்டத்தை எந்தவகையிலாவது முறியடிப்பேன்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details