தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இப்படியும் ஓர் காதல்... கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு! - husband wife death

நாகப்பட்டினம்: மாரடைப்பால் கணவன் இறந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் மனைவியும் மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

husband-wife-death

By

Published : Oct 24, 2019, 1:30 PM IST

நாகை மாவட்டம், நாகூர், பெருமாள் கீழவீதியைச் சேர்ந்தவர் காமராஜ் (70). டைலரான இவர் வீட்டிலேயே தையல் மிஷின் வைத்து தொழில் செய்து வருகிறார். தீபாவளி நேரம் என்பதால் காமராஜ் இரவு, பகல் பாராமல் போதிய அளவு தூக்கமின்றி வாடிக்கையாளர்களின் துணியை தைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த அவரை மனைவி மாலா (65), மகன் சத்யசீலன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காமராஜ் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இதனைக் கேட்ட அவரது மனைவி மாலாவும் அதிர்ச்சியில் மயக்கமடைந்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்த கணவன், மனைவி

மருத்துவர் அவரை சோதித்து பார்த்ததில் மாலாவும் உயிரிழந்தது தெரியவந்தது. மயங்கிய நிலையில் தம்பதியர் இருவரும் அடுத்தடுத்து மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நாகூர் காவல் துறையினர் இருவரது உடலையும் உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சோகம்

இதையும் படிங்க:

கோயில் யானை உயிரிழப்பு! சோகத்தில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details