நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(35). இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(32), பாக்கிய லெட்மி தம்பதினர் வசித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஒராண்டு ஆகிறது. இவர்கள் இருவருக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,நேற்று முன்தினம் (நவ.22) குடிபோதையில் இருந்த செந்தில், அவரது மனைவியை தாக்க முயற்சித்தார்.
இதைக் கண்ட மாதவன் உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர், தம்பதியினர் சண்டையிடுவதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில், மாதவனை காலில் கடித்து, கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மாதவன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.