தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாதத்தில் கசந்த காதல்: தந்தையுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி! - murder

நாகை: திருமணம் முடிந்து ஐந்து மாதங்களே ஆகியுள்ள நிலையில், காதல் கணவனை தந்தையுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக் கட்டியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்குமார்

By

Published : May 13, 2019, 8:19 PM IST

Updated : May 13, 2019, 9:20 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவை அடுத்த தலச்சங்காடு ஊராட்சி அருகே உள்ள தலையுடையார் கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவருக்கு வயது 30. இவர் கலைமதி (28) என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து சுமார் ஐந்து மாதங்களே ஆகின்ற நிலையில் திருமணம் ஆனது முதல் சதீஸ்குமாரும், கலைமதியும் தனியாக தலச்சங்காட்டில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால், சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கலைமதி தனது கணவர் சதீஸ்குமாருடன் தகராறு செய்துவிட்டு தனது தந்தை வீட்டிற்கேச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. மேலும், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனவும் கலைமதி புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சதீஸ்குமார், கலைமதி

இந்நிலையில், சதீஸ்குமார் அப்பராசபுத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி கலைமதி அவரைப் பார்க்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சதீஸ்குமாரை அவரது மனைவி கலைமதி கல்லால் அடித்துள்ளார். இதில் சதீஸ்குமார் மயங்கியதையடுத்து, அங்கு வந்த சதீஸ்குமாரின் மாமனார் நாகராஜ், அவரின் கையில் வைத்திருந்த கத்தியால் சதீஸ்குமாரின் தொடையில் குத்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனைக்கண்ட ஊர்மக்கள், சதீஸ்குமாரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சதீஸ்குமாரின் மனைவி கலைமதி, அவரது தந்தை நாகராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Last Updated : May 13, 2019, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details