தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண நாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்... - Mayiladuthurai Akbar Colony

மயிலாடுதுறை அருகே திருமண நாளில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 13, 2022, 11:22 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவை சேர்ந்தவர்கள் அருள்(எ)ராயப்பன்(49) மற்றும் ரேவதி(45)தம்பதி. 25 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவர்கள், மயிலாடுதுறை பேருந்துநிலையத்தில் சில்லரை வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், ராயப்பன் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கணவரின் குடிப்பழக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளின் படிப்பிற்காக அவரது மனைவி ரேவதி, மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள் பெரம்பலூரில் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்.

தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி கடந்த 1 வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரத்தில் வசிக்கும் தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், திருமண நாளான நேற்று (செப்.12) வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த ராயப்பன் அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்கமறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார். உடைமைகளை தருவதாககூறி அழைத்து சென்றபோது ராயப்பன் வீட்டிற்கு அருகே காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ராயப்பனை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்தில் வரையப்பட்ட குதிரையின் படம் - 'தாய்' என நினைத்து பின்னாலே சென்ற குதிரைக்குட்டி

ABOUT THE AUTHOR

...view details