நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த 35 விழுக்காடு இழப்பீட்டை உடனே வழங்க வேண்டும்.
சிட்கோ தொழிற்பேட்டையில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி 10 ஆண்டுகளுக்கு முன்பு பணம் செலுத்தியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு தொழில் சங்கத்தினர் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.