டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா, ஓன்ஜிசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிராக டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக மனிதசங்கிலிப் போராட்டம்! - வேதாந்தா
நாகை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், திமுகவினர், மனித நேய ஜனநாயக கட்சியினர், பொதுமக்கள் என பலர் நாகை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இப்போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, "போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.