தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சோதனை

நாகை: கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் இன்றுமுதல் தொடங்கியுள்ளன. களப்பணியாளர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கூடுதல் ஆட்சியர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Corona in Nagapattinam
Corona in Nagapattinam

By

Published : Jun 7, 2021, 10:35 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் நாகை இடம்பெற்றிருப்பதால், தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர மாவட்டம் முழுவதும் 760 குழுக்கள் சுமார் ஏழு லட்சம் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகளை இன்றுமுதல் (ஜூன் 7) தொடங்கியுள்ளன.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்யும் பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் தொடங்கிவைத்தார். வீடு வீடாகச் சென்ற அலுவலர்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களுக்கு உடல் வெப்பநிலையை தெர்மல் கருவி கொண்டு சோதித்து, பல்ஸ் ஆக்சிஜன் கருவி கொண்டு ஆக்சிஜன் அளவைப் பரிசோதனை செய்தனர்.

தொடர்ந்து காய்ச்சல், சளி, இருமல் என லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு பாராசிட்டாமல், ஜிங், வைட்டமின் சி ஆகிய மாத்திரைகளை வழங்கிய பரிசோதனை குழுவினர், ஆக்சிஜன் அளவு 90-க்கும் குறைவாக இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினார்.

இன்றுமுதல் கணக்கெடுப்புப் பணிகள் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு ஐந்து நாள்கள் நடைபெறும் என்று தெரிவித்த கூடுதல் ஆட்சியர் பிரசாந்த், வீட்டிற்குப் பரிசோதனைக்கு வரும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் கரோனா அறிகுறிகள் இருந்தால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் பொதுமக்கள் தாமாக மருத்துவமனை சிகிச்சைக்கு முன்வர வேண்டும் எனவும் கூடுதல் ஆட்சியர் பிரசாந்த் வேண்டுகோள்விடுத்தார்.

ABOUT THE AUTHOR

...view details