தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தை பெற்ற பெண்ணை தள்ளிவிட்ட மருத்துவமனை பணியாளர்!

நாகப்பட்டினம்: அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண்ணை, பெண் பணியாளர் சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிவிடும் விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை பணியாளர்
Hospital staff

By

Published : Apr 22, 2021, 3:10 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி தேவங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகவள்ளி. இவர் பிரசவத்திற்காக அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுத்த முருகவள்ளிக்கு சிகிச்சைக்கு முன்பு கரோனா பரிசோதனை மேற்கொண்டு, பரிசோதனையின் முடிவு வருவதற்குள் அறுவைசிகிச்சை செய்து முருகவள்ளியை கரோனா வார்டிற்கு மாற்றியுள்ளனர். முருகவள்ளிக்கு தொற்று இல்லை என பரிசோதனை முடிவு வர அவரை உறவினர்கள் வேறு வார்டுக்கு மாற்றும்படி 5 மணி நேரமாக மருத்துவமனையில் போராடி உள்ளனர்.

அதனை தொடர்ந்து மருத்துவமனை பெண் ஊழியர், குழந்தை பெற்ற அந்த பெண்ணை சக்கர நாற்காலியில் அலட்சியமாக இழுத்து சென்று கீழே தள்ளி, அலட்சியமாக பேசியுள்ளார். இதை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பெண்ணை தள்ளிவிட்ட மருத்துவமனை பணியாளர்

இச்சம்பவம் தற்போது சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details