கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வரக்கோரியும், இந்து அமைப்புகள் சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், அமைதி பேரணிக்கு அனுமதி கோரியிருந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீஸார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இந்து அமைப்புகள் - போலீசாருடன் தள்ளுமுள்ளு!
நாகப்பட்டினம்: பாமக ராமலிங்கம் கொலையைக் கண்டித்து, மயிலாடுதுறையில் தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற இந்து அமைப்பினரை போலீஸார் தடுத்ததால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு
எனினும் போலீசாரின் தடையை மீறி மயிலாடுதுறை பாஜக அலுவலத்திலிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 12, 2019, 2:51 PM IST