நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கையால் ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவாட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் வசிப்பவர் முரளி. முரளி உள்பட அவரது குடும்பத்தில் 5 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு உதவிய இந்து அறநிலையத் துறை - நாகை மாவட்டச் செய்திகள்
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இந்து அறநிலையத் துறை நிர்வாகம் உதவியுள்ளது.
help
சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டி வந்த இவர்கள் ஊரடங்கால் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து இவர்களுக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் திருமணஞ்சேரியில் உள்ள அருள்மிகு உத்வாகநாத சுவாமி கோயில் நிர்வாகத்தினர் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருள்கள், காய்கறிகள், ரூபாய் 5 ஆயிரம் உள்ளிட்டவகைகளை வழங்கினர்.