தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை கிறிஸ்தவர்கள் அபகரிக்கின்றனர் - அர்ஜூன் சம்பத் - mayiladuturai latest news

பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை கிறிஸ்தவர்கள் அபகரிக்கின்றனர் என்றும் பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்ட சென்னை மேயர் தேர்தலில் கிரிப்டோ கிறித்தவரான பிரியா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்

By

Published : Mar 12, 2022, 8:38 PM IST

மயிலாடுதுறை : திராவிடர் கழகத்தை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் இந்து மக்கள் கட்சி இன்று (மார்ச் 12) ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவித்தது. இதையடுத்து, கோட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த ஆர்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஆதீனங்களின் பட்டணப் பிரவேசம், இந்து மக்களின் வழிபாட்டு முறைகளில் தொடர்ச்சியாக தலையிட்டு இந்து மக்களின் மனதை புண்படுத்தும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும்.

அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டனம்

பட்டியலின மக்களின் இட ஒதுக்கீடு சலுகைகளை கிறிஸ்தவர்கள் அபகரிக்கின்றனர். பட்டியலினத்துக்கு ஒதுக்கப்பட்ட சென்னை மேயர் தேர்தலில் கிரிப்டோ கிறித்தவரான பிரியா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்

ஆதிதிராவிடர் நலத்துறை சாதி சான்றிதழ் வழங்கும்போது கவனமுடன் செயல்பட வேண்டும். பட்டியல் இன மக்கள் சலுகைகளை மோசடி செய்யும் கிறிஸ்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில், சிவராத்திரி விழா நடத்திய அறநிலையத்துறையின் முயற்சிக்கு கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவரை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தது கண்டத்துக்கு உரியது.

ஆளுநருக்கு மரியாதை இல்லை

பதவியேற்றவுடன் பால் விலையில் 3 ரூபாயை குறைத்த தமிழ்நாடு முதலமைச்சர், தற்போது உள்ளாட்சித் தேர்தலின் முடிவுக்குப் பிறகு பால் விலை, மதுபான விலை ஆகியவற்றை உயர்த்தியுள்ளார். மின்சாரக் கட்டணமும் உயரவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் விலைவாசி உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. ஆளுநர் பதவி என்பது அரசியல்சாசன ரீதியாக முக்கியமான பதவி. அப்பதவிக்கு அவமரியாதை செய்யும் விதத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது முதலமைச்சரின் கவனத்திற்கு தெரிந்து நடக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்நாடு ஆளுருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார். அப்போது, இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : பன்நோக்கு மருத்துவமனை - முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்

ABOUT THE AUTHOR

...view details