மயிலாடுதுறை: குத்தாலம் ஒன்றியம் பழையகூடலூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. வேளாண்மை துறை சார்பில் பொதுமக்களுக்கு படுதா மற்றும் வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறையில் அதிக அளவில் குழந்தைகள் திருமணம்: மாவட்ட ஆட்சியர் வேதனை அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா, " பெண்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக யாரையும் நம்பியிருக்க கூடாது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குழந்தைகள் திருமணம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் திருமணம் செய்த சிறுமிகள் மட்டுமின்றி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்தி விடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். பெண் குழந்தைகளை முதலில் திருமணத்தை பற்றி யோசிக்காமல் நன்றாக படிக்க வைக்க வேண்டும், பெண்களை சமமாக நடத்துவோம், படிப்பை நிறுத்தமாட்டோம் என்ற உறுதியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று பெற்றொர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: சுதந்திர தின விழாவில் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்...