தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதரவற்ற முதியவரை அடக்கம் செய்த ஊராட்சி நிர்வாகம்! - Pain Management Panchayat Administration

நாகை: ஆதரவற்ற முதியவரின் உடலை இந்து முறைப்படி ஊராட்சி நிர்வாகத்தினர் அடக்கம் செய்ததனர்.

முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் காட்சி
முதியவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லும் காட்சி

By

Published : Apr 17, 2020, 11:47 AM IST

நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் வசித்துவந்தவர் கோவிந்தராஜ் (75 வயது). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதாலும், உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இறந்த கோவிந்தராஜின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை.

ஆதரவற்ற முதியவரின் உடலை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் கொண்டு செல்லும் காட்சி

இத்தகவல் அறிந்த வலிவலம் ஊராட்சித் தலைவர் மணிகண்டன், கோவிந்தராஜுவின் இல்லத்திற்குச் சென்று, ஊராட்சி சார்பாக இந்து முறைப்படி எவ்வாறு இறுதிச் சடங்கு சம்பிரதாயங்கள் செய்வார்களோ அவ்வாறு செய்து, முறைப்படி அவரின் உடலை அடக்கம் செய்தனர். இதில், ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மேலும் அப்பகுதி தன்னார்வ இளைஞர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:இன்றைய நிலையில் எங்கு இருக்கிறது கரோனா? - முழு விபரம்

ABOUT THE AUTHOR

...view details