தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என மயிலாடுதுறை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம்

By

Published : Jul 31, 2019, 6:40 AM IST

தமிழ்நாட்டில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர். ஆனாலும், சிலர் இன்றளவும் ஹெல்மெட் அணிவதை தவிர்கின்றனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் விதமாக, இனி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு மயிலாடுதுறை பங்குகளில் பெட்ரோல் வழங்கப்படாது என மயிலாடுதுறை காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது!

இந்த அறிவிப்பு காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில், மயிலாடுதுறை நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குளிலும், அறிவிப்பு பலகைகள் மூலம் இத்திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details