நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் சார்பில் நடத்தப்பட்டுவருகின்றது.
அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.
திருப்பூண்டி கடைவீதியில் தொடங்கிய சைக்கிள் பேரணி தண்ணீர் பந்தல், காமேஸ்வரம், பட்டிரோடு, கன்னிதோப்பு உள்ளிட்ட கிராமங்கள் வழியே சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் சென்ற சைக்கிள் பேரணி விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் மாணவர்கள் 'தலைக்கவசம் உயிர்க்கவசம்', 'தலைக்கவசம் அணிவோம் உயிரிழப்பை தடுப்போம்' போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும், தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதையும் படிக்க: ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘எமதர்மராஜா’!