நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு வார காலமாக மழையின்றி வறண்ட வானிலையோடு ஓய்ந்திருந்த கனமழை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த ஒரு வார காலமாக நாகப்பட்டினத்தில் மழை பெய்யாமல் இருந்தது.
நாகப்பட்டினத்தில் மீண்டும் கனமழை - நாகையில் மழை மக்கள் மகிழ்ச்சி
நாகப்பட்டினத்தில் மீண்டும் கனமழை தொடங்கியதை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதனை அடுத்து நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்துவருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கீழ்வேளூர், சிக்கல், பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகையில் ஒரு வாரகாலம் ஓய்ந்திருந்த கனமழை மீண்டும் தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:அரசின் இலவச இருசக்கர வாகன திட்டத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் மனு!