தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஜூன் 25) முதல் தமிழ்நாடு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நாகை மாவட்டத்தின் 11 எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலவாஞ்சூர், கானூர், கொள்ளிடம், நண்டலார் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடையாள அட்டை, இ-பாஸ் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து மாவட்டத்தின் உள்ளே அனுமதிக்கின்றனர்.