மயிலாடுதுறை:வேகமெடுக்கும் கரோனா வைரஸ் பரவலால் தமிழ்நாடு அரசு கடந்த 6ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ஆவது வாரமாக ஜன.23ஆம் தேதியான (ஞாயிறு) இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன.
காவல்துறை தீவிரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 2 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.