மயிலாடுதுறை:குத்தாலம் பேரூராட்சியில் நதியா, ஜெயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளராக வேலை பார்த்து வந்தனர். வீடுகள்தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் கொடுப்பது போன்ற பணிகளைச் செய்து வந்துள்ளனர்.
ஏழு ஆண்டுகளாக தனியார் நிறுவன ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.
மீண்டும் பணி வழங்கக் கேட்டும் பணி வழங்கப்படவில்லை. மேலும் அந்த பணிகள் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுகாதாரப் பரப்புரையாளர் பெண் தற்கொலை முயற்சி இது குறித்து நதியாவின் தாயார் லட்சுமி கூறுகையில், "நதியாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியல் தலையீட்டால் அவருக்கு வேலை பறிபோய்விட்டதாகவும், கரோனா காலத்திலும் களப்பணியாற்றிய அவருக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: 'மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் பள்ளிக்குச் சீல் வைக்கப்படும்'