நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் கடைவீதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் நகராட்சியின் முக்கிய வீதிகளில் சுற்றித்திரிந்து வந்தன.
இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகினர். இதுகுறித்த பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் அண்ணாமலை தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள், நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து பாதுகாப்பாக கோசாலையில்ஒப்படைத்தனர்.