மயிலாடுதுறை மாவட்டம், அஞ்சார்வார்தலை கடைவீதியில் குத்தாலம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்ததில், ரூ.2 லட்சம் மதிப்பிலான 7,500 ஹான்ஸ் பாக்கெட்டுகள் (குட்கா) சிக்கியன. உடனே ஆட்டோவுடன் அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆட்டோவில் வந்த இருவரையும் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் - 2 பேர் கைது! - gutka sales in mayiladuthurai
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
two-arrest-in-mayiladuthurai
முதல்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கதிராமங்கலம் முகம்மது இம்ரான் (25), ராஜகோபாலபுரம் அப்துல் ரஹ்மான் (28) ஆகியோர் என்பதும், கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி வந்து விற்பனை செய்யவிருந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க:ரூ. 42 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்