மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உள்பட்ட மணக்குடியைச் சேர்ந்தவர் ரவுடி கலக்கி என்கிற கட்டபொம்மன் (24). இவர் மீது மயிலாடுதுறை செம்பனார்கோவில் காவல் சரகப் பகுதிகளில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கஞ்சாநகரம் பகுதியில் ராமலிங்கம் என்ற நபரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியிருந்த ரவுடி கட்டபொம்மனை மயிலாடுதுறை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் கைதுசெய்து நாகை சிறையில் அடைத்தனர்.