நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் குஜராத்திலிருந்து கேரளா நோக்கிச் செல்லும் பாரத் தர்ஷன் ரயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்தபோது அதில் பயணம்செய்து மூதாட்டி கரோனா தொற்றால் உயிரிழந்தார். இவருடன் பயணித்த 56 நபர்களைச் சோதனை செய்ததில், பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யபட்டது.
இதையடுத்து, தொற்று உறுதிசெய்யபட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா 2ஆவது அலை: தமிழ்நாட்டில் தீவிர தேர்தல் பரப்புரை