நாகப்பட்டினம்: முந்தைய தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991ஆம் ஆண்டு அக்.18ஆம் நாளில் தற்போதுள்ள நாகப்பட்டினம் மாவட்டம், தனியாகப் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது.
இதைக் கொண்டாடும் விதமாக நாகையின் தனியார் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
30 ஆம் ஆண்டில் நாகபட்டினம்
நாகையில், நாகை 30 விழாவினை ஒட்டி அதை கொண்டாடும் விதமாக இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரி சார்பில் ஓவிய உலக சாதனை முயற்சி நாகை மாவட்டம் தனியாக பிரிந்து 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நாகை 30ஆம் ஆண்டு விழா கடந்த 18ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்றது. நான்காம் நாளான இன்று நாகையில் அமைந்துள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரி சார்பில் பிரமாண்ட நகர்வு ஓவிய உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
நாகை மாவட்டத்துக்கு வயது 30 மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாவட்டத்தின் சிறப்புகள் குறித்துப் பேசினார்.
பின், அதனைத்தொடர்ந்து அரை கிலோமீட்டர் சுற்று பரப்பளவு கொண்ட மைதானத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.
இதில் நாகையில் 30ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக, நகரும் ஓவியமாக நகர்ந்து காட்டி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். நாகையில் 30ஆம் ஆண்டு விழாவின் இறுதி நாளான நாளை 22 ஆம் தேதி பட்டிமன்றம், பரிசளிப்பு விழா, கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவுபெற உள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு