நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பாலூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சதீஷ் என்பவர் 10 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பருத்திச் செடிகள் வெட்டிக்கிளிகளின் தாக்குதலால் சேதமடைந்தன.
நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் பருத்திச் செடிகளில் உள்ள இலைகள், பூக்கள், காய்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்தின. உடனே இதுகுறித்து விவசாயிகள் வேளாண்மைத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து செம்பனார்கோவில் துணை வேளாண்மை அலுவலர் உமா பசுபதி தலைமையில் வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.