தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு உத்தரவை மீறி மயிலாடுதுறையில் கிராம சபை கூட்டம்!

மயிலாடுதுறை ஒன்றியம் சித்தர்காடு, திருமங்கலம் ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி, திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

Grama Saba meeting
Grama Saba meeting

By

Published : Oct 2, 2020, 7:40 PM IST

மயிலாடுதுறை: காந்தி ஜெயந்தி விழாவையொட்டி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் கரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக நேற்றிரவு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டின், அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில், கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, சித்தர்காடு ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் தலைமையில் கிராம சபை கூட்டம் அங்குள்ள அண்ணா திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று, வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி பேசினர். சுமார் 50 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதே போல் திருமங்கலம் ஊராட்சியிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க :காந்தி ஜெயந்தி போட்டியில் தமிழ் புறக்கணிப்பு - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை !

ABOUT THE AUTHOR

...view details