பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த கலையழகி (26) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் இல்லத் திருமண விழாவிற்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கலையழகி உயிரிழந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த திருவெண்காடு காவல் துறையினர், கலையழகி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதுடன், கொலை குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.