அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதினை 59 ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்து திரும்ப பெற வலியுறுத்தி நாகை மாவட்ட அரசு மருத்துமனை வளாகத்தில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59 திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! - Govt Employees Protest
நாகை: அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதினை 59 ஆக உயர்த்திய ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் இந்த அறிவிப்பால் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிப்பதுடன், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பதவி உயர்வினை பறிக்கும் வகையிலும் இந்த அரசாணை இருப்பதால், தமிழ்நாடு அரசு உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் சரண்டர் விடுப்பு ரத்து, ஜிபிஎப் வட்டி குறைப்பு, அகவிலைப்படி முடக்கம் ஆண்டு கால பணி ஓய்வு மறுப்பு உள்ளிட் அரசு ஊழியர்கள் மீதான அரசின் தொடர் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:கமலாத்தாள் பாட்டிக்கு குவியும் ஆதரவு!