தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் புதிய  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு! - புதிய  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நாகை: மயிலாடுதுறை அருகே புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

govt Direct Paddy Procurement Station opened in nagai
govt Direct Paddy Procurement Station opened in nagai

By

Published : Aug 25, 2020, 3:04 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தொழுதாலங்குடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இதையடுத்து தொழுதாலங்குடி ஊராட்சியில் புதிதாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்று (ஆக.25) திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே.செந்தில்நாதன், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கிவைத்தனர்.

இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிப கழத்தின் மண்டல துணை மேலாளர் சாமிநாதன் தெரிவித்தார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details