நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டுக்குடி கிராமத்தை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து நிர்த்தனமங்கலம் பேருந்துநிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலில் இறங்கியது.
வாய்க்காலில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் - govt bus accident in nagai 20 injured
நாகை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
![வாய்க்காலில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்து: 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் நாகையில் அரசுப் பேருந்து விபத்து எட்டுக்குடியருகே அரசுப் பேருந்து விபத்து govt bus accident in nagai 20 injured நாகை மாவட்டச் செய்திகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6028978-thumbnail-3x2-nagai.jpg)
அரசுப்பேருந்து விபத்து
அரசுப்பேருந்து விபத்து
இதில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளி மாணவர்கள் என 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:'உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்' - சேலம் பெற்றோர் உருக்கம்