மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆதீன கலை கல்லூரியின் பவளவிழாவின் (75 ஆண்டுகள்) தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு, தருமபுரம் ஆதீனம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு இறைமண்
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,’’உண்மையாக, கடுமையாக உழைத்தால் யார் வேண்டுமாலும் ஆளுநராக முடியும் என்பதை இந்து சமயம் எனக்கு சொல்லி கொடுத்தது. உழைக்க வேண்டும், படிக்க வேண்டும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதை இறைவழிபாடுதான் சொல்லிகொடுத்தது.
மாணவிகள் நமது பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்பற்றி உண்மையாக உழைத்தால் வாழ்வில் பெரிய இடத்தை அடைவதற்கு பலமாக இருக்கும். சமய தமிழ், ஆன்மீக தமிழ் தழைத்து ஓங்கவேண்டும். தமிழும், சமயமும் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறது.
தடுப்பூசி போடுங்க...
இது இறைமண். உலகத்தில் வளர்ந்த நாடுகளால்கூட கரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்க முடியாதபோது இந்தியாதான் தயாரித்த தடுப்பூசியை மக்களுக்கு கொடுத்தது என்றால் இந்தியாவும், தமிழ்நாடும் இறைபூமிதானே. நமக்கு தேவையானதை இறைவன் கொடுப்பான்.