தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டெங்கு போல் சனாத்தை ஒழிப்போம் என்றவர்களால் டெங்குவை ஒழிக்க முடியவில்லை" -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் - தமிழிசை சவுந்தரராஜன்

Tamilisai Soundararajan: மயிலாடுதுறை வானமுட்டி பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன், டெங்குவை போல் சனதானத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களால் டெங்குவையே ஒழிக்க முடியவில்லை என விமர்சித்து உள்ளார்.

tamilisai soundararajan darshan at mayiladuthurai Vanamutti Perumal temple
தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 5:52 PM IST

தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மயிலாடுதுறை:சோழம்பேட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரே அத்திமரத்திலான 14 அடி விஸ்வரூபத்தில் சீனிவாச பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

கோயிலில் அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெருமாள் சன்னதியில் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் அர்ச்சனை செய்த தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரிலும் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “விஞ்ஞானத்துக்கு வழிகாட்டியதே மெய்ஞானம்தான். 9 கோள்கள் உள்ளன என்று விஞ்ஞானம் கண்டறிந்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆன்மீகரீதியான எதிர்கருத்துக்கள் தமிழகத்தில் பரப்பப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளும் மதவழிபாட்டை தமிழகத்தில் தொடர்ந்து நிந்திப்பதும், உதாசீனப்படுத்தும், பரிகசிப்பதும் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும்.

இது கருத்துச் சுதந்திரம் என சொல்லும் நிலையில், தமிழக அரசுக்கு எதிராக ஏதேனும் பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே, கருத்து சுதந்திரம் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், இந்து மதத்தைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. சனாதனம் என்பது வாழ்க்கை முறை. அதனை டெங்குவைப் போல் ஒழிப்போம் என்று சொல்பவர்களால் டெங்குவை ஒழிக்கமுடியவில்லை.

மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி நீங்கள் விமர்சிப்பீர்களா? தமிழகத்தில் பல குடமுழுக்குகளை நடத்தியதாக கூறும் தமிழக முதல்வர், அதில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை. காவிரிப் பிரச்னை சுமூகமாக தீரக்கப்பட வேண்டும். விவசாயிகளை கர்நாடக விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கக் கூடாது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிரச்னையை ஆளும் கட்சி தான் கையாள வேண்டும். எதிர்கட்சிகள் போராட்டம் செய்வதாக சொல்வது எவ்வாறு நியாயமாக இருக்கும்.

காவிரி நதி நீர் பிரச்னைக்கு சட்டரீதியாக உச்சநீதிமன்றம் செல்வதாக சொல்லும் தமிழக அரசு இப்பிரச்னையை நட்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் அமைத்துள்ளது வெற்றிக்கான கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி என தமிழக முதல்வர் சொல்கிறார். இந்தி எதிர்ப்பு, ஆன்மீக எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு போன்ற கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? அனைவருக்கும் தண்ணீர் தர வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாத போது கொள்கை எங்கு போனது?” எனத் தெரிவித்தார். இதில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, மத்திய வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அத்திப்பள்ளி விபத்து; உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details