தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை அருகே இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளிக் கட்டடம் - பொதுமக்கள் அச்சம்! - மயிலாடுதுறை மாவட்டச்செய்திகள்

இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள அரசுப்பள்ளி கட்டடத்தை உடனடியாக இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Government school building in danger, near Mayiladuthurai, Mayiladuthurai latest news, தரங்கம்பாடி தாலுகா, சேத்தூர் ஊராட்சி, மயிலாடுதுறை மாவட்டச்செய்திகள், மயிலாடுதுறை
government-school-building-in-danger-of-collapsing-near-mayiladuthurai

By

Published : Feb 24, 2021, 10:25 AM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சேத்தூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு வகுப்புகள் புதிய கட்டத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால் ஏற்கெனவே இயங்கிவந்த வகுப்பறைகள், பழைய கட்டடங்கள் இடிக்காமல் அப்படியே இருக்கிறது. அக்கட்டடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் செங்குத்தாக இரண்டு சுவர்களும் தனித்தனியாக நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்துவிழும் அபாயநிலை உள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடம்

பழைய கட்டடத்திற்கு அருகே குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அந்த பள்ளி கட்டடத்தை இடிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு உள்ளதால் அந்த நிலத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை: அரசால் தடைசெய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details