மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன்(45). இவர் பொறையாரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு சித்ரா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் சித்ரா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.