நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வழுவூரில் பொறையாரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிவந்த தனியார் பேருந்து வழுவூர் அருகே ஒரு வாகனத்தை முந்திச் சென்றபோது எதிரே திருவாரூர் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்து வந்ததால் தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தும் பிரேக் வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்ட தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்தை பின்னால் நகர்த்திச் சென்றுள்ளார். ஆனால் அரசுப் பேருந்து பிரேக் பிடித்தும் நிற்காமல் தனியார் பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.