உலகப்புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரங்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் பெரிய வியாழன் நேற்று மாலை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து பேராலயத்தின் கலையரங்குகளில் இயேசு பிரான் சீடர்களுக்கு பாதம் கழுவியதை குறிக்கும் விதமாக பங்கு தந்தையர்கள் சீடர்களின் பாதங்களை கழுவி திருச்சடங்குகளை நிறைவேற்றினர்.
வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி - ஏராளமானோர் பங்கேற்பு
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வியாழனையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
இதைத்தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதனிடையே புனித வெள்ளியின் முக்கிய நிகழ்வான சிறப்பு பிராத்தனை இரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.