நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகில் காவிரி ஆற்றின் படித்துறையில் சாக்கு மூட்டையில் சுவாமி அம்பாள் சிலைகள் கிடந்தன.
அவற்றை, ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் எடுத்து, அருகில் உள்ள கோயிலில் வைத்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
சாக்கு மூட்டையில் சிறிய அளவிலான பகவதி அம்மன், வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், இரண்டு பெருமாள் சிலைகள், பூதேவி, ஸ்ரீ தேவி, அன்னபூரணி, எட்டு கை காளி ஆகிய ஒன்பது சிலைகள் இருந்தன.