நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஆலங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(26). இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். குத்தாலத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவரும் மாணவி ஒருவரை கடந்த சில மாதங்களாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவிக்கு மாரீஸ்வரன் தன்னை பின்தொடர்வது பிடிக்கவில்லை.
காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது...
நாகை: காதலை ஏற்க மறுத்ததால் பிளஸ் 2 மாணவிக்கு கட்டாயமாக தாலி கட்டிய கொத்தனாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் எப்படியாவது மாணவியை வாழ்க்கை துணையாக கரம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 10ஆம் தேதியன்று குத்தாலம், கோமல் சாலையில் வைத்து அவருக்கு மாரீஸ்வரன் தாலி கட்டிவிட்டார்.
அப்போது அந்த மாணவி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாரீஸ்வரனை விரட்டினர். பின்னர், இது குறித்து மாணவியின் பெற்றோர் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மாரீஸ்வரனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.