மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாடல் பெற்ற பெரிய கோயில் என்று அழைக்கப்படும் மாயூரநாதர் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த தலத்தில் தான் சமயகுரவர்களால் தேவாரப் பாடல் பாடப்பெற்றது. இங்கு அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்து, மயில் உரு நீங்கி சாபவிமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. 160 அடி உயரத்தில் ஒன்பது நிலை கொண்ட ராஜகோபுரம் அமையப்பெற்ற ஸ்தலமாகும்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளுடைய இந்த கோயிலில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ 24-வது குருமஹா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளானையின் வண்ணம் மாயூரநாதர் நற்பணி மன்றம் சார்பில் மயூரநாதசுவாமி மற்றும் அபயாம்பிகை அம்பாளுக்கு ஆண்டுதோறும் நெய் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகை : தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்! திராளன பக்தர்கள் சாமி தரிசனம்!