தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடியில் ஜெர்மன் ஓவியக் கண்காட்சி

நாகை: சீகன் பால்கு அருங்காட்சியகத்தில் ஜெர்மன் நாட்டவரின் சர்வதேச 'சுற்றுலா ஓவியக் கண்காட்சி' நடைபெற்றது.

nagapatinam
nagapatinam

By

Published : Feb 9, 2020, 11:39 PM IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பார்த்தலோமியஸ் சீகன் பால்கு பன்முக பண்பாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில், பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த மோரிஸ் குட்சோ என்பவரின் சுற்றுலா குறித்த ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதனை அருங்காட்சியக காப்பாட்சியர் ஜாஸ்மின் எப்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

இது குறித்து மோரிஸ் குட்சோவின் நண்பர் ரூட்ரிகோ ஜெப்பிரின் கூறுகையில், 'பல்வேறு நாடுகளின் பழங்கால கலாச்சாரங்களையும் தற்போதுள்ள கலாச்சாரங்களையும் அறிந்து அதனை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தி வருகிறோம்.

ஓவியக் கண்காட்சி

அதேப்போல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சீகன் பால்கு வாழ்ந்த தரங்கம்பாடியில் ஒருவாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சீகன்பால்கு காலத்தில் அவர் வரைந்த பழங்கால ஓவியங்களும் அவை தற்போது எவ்வாறு உருமாற்றமடைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளும் வகையிலும் ஓவியங்களை வரைந்து அதனை இங்கு காட்சிபடுத்தியிருக்கிறோம்' என்றார்.

இக்கண்காட்சியில் பொதுமக்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குடமுழுக்கு விழாவை அலங்கரிக்கும் பொன்னியின் செல்வன் ஓவியம்!

ABOUT THE AUTHOR

...view details