பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, வறுமை ஒழிப்பு, தூய்மை இந்தியா, காந்தியின் கோட்பாடுகள் குறித்த பிரசார பாதயாத்திரை நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் பாஜகவினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
காந்தியின் 150ஆவது பிறந்த நாள் விழா - பாஜகவினர் பாதயாத்திரை - gandhi 150 birthday BJP celebration
நாகப்பட்டினம்: மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மங்கைநல்லூரில் நடைபெற்ற பாதயாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

gandhi 150 birthday bjp celebration
காந்தி 150வது பிறந்த நாள் விழா பாதயாத்திரையில் கலந்து கொண்ட பாஜகவினர்
இதனை பாஜக மண்டல பொறுப்பாளர் வரதராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மங்கைநல்லூரிலிருந்து கோமல் வரை 10 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: முதலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு!