தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள் தீவிரம்! - nagai

நாகை:  விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பனை எடுத்துச்செல்ல வயல்களில் குழாய்களைப் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் தொடக்கியுள்ளது.

விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள்

By

Published : Jul 18, 2019, 10:13 AM IST

நாகை மாவட்டம் மாதானத்தில் இருந்து மேமாத்தூர் வரை 29 கி.மீ தூரத்திற்கு விவசாய நிலங்களின் வழியே கெயில் நிறுவனம் ராட்சச குழாய்கள் புதைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையினர் பாதுகாப்புடன் குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக உள்ள குருவை நெட்பயிர்களை சேதப்படுத்தி குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் பணிகள்

மேலும், அந்த வழியே செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் கூட பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details