கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூலை 5) நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் முழு ஊரடங்கு உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மயிலாடுதுறை முழுவதும் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பெட்ரோல் பங்குகள், இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. ஆட்டோ, கார் உள்ளிட்ட வாடகைக்கு செல்லும் வாகனங்களும் இயங்கவில்லை.