தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசப் பேருந்து - free bus service curfew affected people

நாகப்பட்டினம்: ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவசமாகப் பேருந்தை இயக்கிவரும் உரிமையாளருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

free-bus-service-in-nagappatinam
free-bus-service-in-nagappatinam

By

Published : Jun 19, 2020, 7:24 AM IST

கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ஆம் தேதிமுதல் பொதுப் போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. அதையடுத்து ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ஜூன் 1ஆம் தேதிலிருந்து அரசுப் பேருந்துகளும், ஜூன் 9ஆம் தேதிலிருந்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதில் 60 விழுக்காடு பயணிகளுடன் மட்டும் பேருந்துகளை இயக்க வேண்டும், மண்டலத்திற்குள் மட்டுமே இயக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாகப்பட்டினம் மயிலாடுதுறையிலிருந்து நீடூர், பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி வழியாகக் கொள்ளிடம் வரை இயக்கப்படும் 'பவித்ரன்' என்ற தனியார் பேருந்து கட்டணமின்றி இயக்கப்பட்டுவருகிறது.

அரசின் கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படும் அந்தப் பேருந்தின் உரிமையாளர் பிரகாசம், பொதுமக்களின் பொருளாதார நிலை கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அப்பேருந்து தினமும் நான்கு டிரிப்கள் சென்றுவருகின்றன. வரும் ஜூன் 24ஆம் தேதிவரை கட்டணமில்லா சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் உரிமையாளர் பிரகாசம், ஓட்டுநர் பாலமுருகன் உள்ளிட்டவர்களை வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க:பேருந்துகளில் பேடிஎம் மூலம் பணம் செலுத்துவது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details