நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடலோரக் காவல் சோதனைச்சாவடி அருகே பல்வேறு கடைகள் உள்ளன. நேற்றிரவு (ஏப்ரல் 23) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு இன்று காலை கடையைத் திறக்க வந்த கடை உரிமையாளர்கள், அங்கிருந்த நான்கு கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நான்கு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு! - police investigaion
நாகை: காமேஸ்வரம் கடலோரக் காவல் சோதனைச்சாவடி அருகே அடுத்தடுத்து நான்கு கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் பட்டுப் புடவைகள் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது செல்போன் கடை, கணினி மையம், ஜவுளிக்கடை உள்ளிட்ட நான்கு கடைகளில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன் மற்றும் பட்டுப் புடவைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து கடையின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கீழையூர் காவல் துறையினர் திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காமேஸ்வரம் கடலோரக் காவல் சோதனைச்சாவடி அருகே திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது வர்த்தகர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.