தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை : குத்தாலம் அருகே பாசன வாய்க்காலில் காம்பவுண்ட் சுவர் கட்டும் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Formers protest in nagai
Formers protest in nagai

By

Published : Jul 26, 2020, 3:46 PM IST

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஸ்ரீகண்டபுரத்தில் உள்ள நாட்டாற்றிலிருந்து நிம்மேளி என்ற வாய்க்கால் பிரிந்து 500 ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக திகழ்கிறது.

இந்த வாய்க்காலை ஒட்டி தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. வாய்க்கால் தூர்வாரும்போது பள்ளிக்கூட சுவர்மண் சரிந்துள்ளது. இதைக்கண்ட பள்ளி நிர்வாகம் கான்கிரீட் சுவர் அமைக்க முடிவெடுத்து வாய்க்காலை ஒட்டி காம்பவுன்ட் சுவர் பணியை தொடங்கியுள்ளனர்.

வாய்க்காலில் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு இந்த காம்பவுன்ட் சுவர் வாய்க்காலில் அமைக்கப்படுகிறது என்றும், அதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பிரச்னைக்குறிய இடத்தை அரசு அளந்து பாசன வாய்க்காலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அலுவலர்கள் முன்னிலையில் காம்பவுன்ட் சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details