கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்களின் உயிர் காக்கும் போராட்டத்தில், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் இச்சேவையை ஊக்குவிக்கும் வகையில், அரசு மருத்துவர் பத்மராஜன் உள்பட குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், என்95 முகக்கவசம் உள்ளிட்டவற்றை மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர்.
அரசு மருத்துவமனைக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்! - donate govt hospitals
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இலவசமாக வழங்கினர்.
மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!
அரசு மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!
மயிலாடுதுறை தலைமை மருத்துவர் ராஜசேகர், மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொண்டார். இரவு, பகலாக மக்களுக்காக உழைக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கு, பணி நேரத்தில் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவுமிருக்க உதவி செய்ததாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஒரேநாளில் 1000 பேர் பாதிப்பு: தீவிரமடையும் கரோனா!